ADDED : மார் 14, 2025 01:48 AM
தேனீக்கள் கொட்டி27 பேர் காயம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேர்பேட்டை மலையடிவாரத்தில் பழமையான அரச மரம் ஒன்று உள்ளது. அதிலுள்ள தேன்கூட்டிற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தேன்கூட்டிலிருந்து வெளியேறிய தேனீக்கள் அப்பகுதியில் இருந்தவர்களை கொட்டியுள்ளது. இதில், 14 ஆண்கள், 12 பெண்கள் ஒரு குழந்தை உள்பட, 27 பேர் காயமடைந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவில் திருவிழாவிற்கு தேங்காய் விற்க வந்த முதியவர் வெங்கடேசன், 70 என்பவர் மட்டும் தேனீக்கள் கொட்டியதில் படுகாயமடைந்த நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.