/உள்ளூர் செய்திகள்/கரூர்/உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைதுஉணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது
உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது
உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது
உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூலை 15, 2024 12:57 AM
கரூர்: தென்னிலை அருகே, உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பீடா கடையில் பணம் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்-தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை அருகே கார்வழி சீலநாயக்கன்-பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 65.
அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 11ல் ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த நவீன் குமார், 29, என்பவர், தன்னை உணவு பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி, பால-சுப்பிரமணியத்தின் மளிகை கடையில் சோதனை செய்துள்ளார். அப்போது, கடையில் இருந்த, 52,000 ரூபாயை நவீன் குமார் திரு-டிக்கொண்டு சென்று விட்டார்.இதுகுறித்து, மளிகை கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் நேற்று, நவீன் குமாரை கைது செய்தனர்.