Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தி.மு.க., - எம்.எல்.ஏ., பங்கேற்ற விழாவில் அ.தி.மு.க., பஞ்சாயத்து யூனியன் தலைவர்

தி.மு.க., - எம்.எல்.ஏ., பங்கேற்ற விழாவில் அ.தி.மு.க., பஞ்சாயத்து யூனியன் தலைவர்

தி.மு.க., - எம்.எல்.ஏ., பங்கேற்ற விழாவில் அ.தி.மு.க., பஞ்சாயத்து யூனியன் தலைவர்

தி.மு.க., - எம்.எல்.ஏ., பங்கேற்ற விழாவில் அ.தி.மு.க., பஞ்சாயத்து யூனியன் தலைவர்

ADDED : ஜூலை 14, 2024 03:22 AM


Google News
கரூர்: க.பரமத்தி அருகே, புதிய பஞ்., அலுவலக கட்டிட திறப்பு விழாவில், தி.மு.க.,- எம்.எல். ஏ., வுடன், அ.தி.மு.க., வை சேர்ந்த பஞ்., யூனியன் தலைவர் பங்கேற்றார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்., யூனியன் தென்னிலை கிழக்கு பஞ்சாயத்துக்கு, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்-டத்தில், 22.63 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்-டப்பட்டுள்ளது. அதை நேற்று, அரவக்குறிச்சி தி.மு.க.,- எம். எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்தார். அப்போது, அ.தி.மு.க., வை சேர்ந்த, க.பரமத்தி பஞ்., யூனியன் தலைவர் மார்க்கண்டே-யனும் உடனிருந்தார்.

கடந்த, மூன்று ஆண்டுகளாக, தி.மு.க.,- எம்.எல்.ஏ., இளங்கோ பங்கேற்ற அரசு விழாவில், அ.தி.மு.க., வை சேர்ந்த க.பரமத்தி பஞ்., யூனியன் தலைவர் மார்கண்டேயன் பங்கேற்ற-தில்லை. தற்போது, தி.மு.க.,- எம்.எல்.ஏ., பங்கேற்ற விழாவில், அவர் கலந்து கொண்டது, இரு கட்சி நிர்வாகிகளிடையே ஆச்சரி-யத்தை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us