/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசு கல்லுாரியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு அரசு கல்லுாரியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
அரசு கல்லுாரியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
அரசு கல்லுாரியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
அரசு கல்லுாரியில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : செப் 23, 2025 01:19 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி முதல்வர் காளீஸ்வரி தலைமையில் நடந்த கருத்தரங்கில், அரவக்குறிச்சி வட்டார காசநோய் விழிப்புணர்வு துறையிலிருந்து ஜானி, சரவணண் ஆகியோர் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இரண்டு வாரங்களுக்கு மேல் சளி, இருமல், சளியில் ரத்தம், மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை ஆகிய அறிகுறி கள் இருந்தால், முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.காசநோயால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, காசநோய் செயலின் மூலம் எவ்வாறு உதவி செய்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.