/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் மனு காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் மனு
காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் மனு
காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் மனு
காவிரி ஆற்றில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்த கலெக்டரிடம் மனு
ADDED : செப் 23, 2025 01:19 AM
கரூர் :காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என, வன்னியர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் சக்தி தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், காவிரி ஆற்றின் குறுக்கே நெரூர்-உன்னியூர் பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் கீழ் பகுதியில் மணல் திருட்டு நடந்து வருகிறது. பாலத்தை ஒட்டியுள்ள மறவாபாளையம், என்.புதுப்பாளையம், அரங்கநாதன் பேட்டை ஆகிய கிராமங்களில் இரவு 10:00 மணி முதல் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டு வருகிறது. மேலும் கரையோரத்தில், செங்கல் சூளைக்கு தேவையான நவட்டு மண் எடுத்து செல்லப்படுகிறது. மணல் கொள்ளையடித்து செல்லும் லாரிகளால், சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
அவர்கள், மின்னல் வேத்தில் செல்வதால், விபத்து ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. மணல் கொள்ளையால் குடிநீர் உள்பட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.