/உள்ளூர் செய்திகள்/கரூர்/பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த டெய்லர் பலிபைக்கிலிருந்து தடுமாறி விழுந்த டெய்லர் பலி
பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த டெய்லர் பலி
பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த டெய்லர் பலி
பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த டெய்லர் பலி
ADDED : ஜூலை 31, 2024 12:04 AM
குளித்தலை: பைக்கிலிருந்து தடுமாறி விழுந்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அடுத்த.
கன்னிமார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் டெய்லர் ஜனகராஜ், 36. இவர், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் கடந்த, 28 இரவு, 10:45 மணிய-ளவில் சொந்த வேலையாக தரகம்பட்டி சென்று கொண்டிருந்தார். கடவூர் பாலவிடுதி நெடுஞ்சாலை கணவாய் மேடு அருகே, வளைவில் திரும்பும் போது நிலை தடுமாறி சாலை ஓரமாக இருந்த கல்லில் மோதி, தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். இவரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனும-தித்தனர். அங்கிருந்த மருத்துவர் சோதித்து பார்த்ததில், ஏற்கனவே ஜனகராஜ் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அவரது மனைவி நாகஜோதி, 34, அளித்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்-றனர்.