/உள்ளூர் செய்திகள்/கரூர்/தமிழ்நாடு நாள் விழா போட்டி; மாணவ, மாணவிகளுக்கு பரிசுதமிழ்நாடு நாள் விழா போட்டி; மாணவ, மாணவிகளுக்கு பரிசு
தமிழ்நாடு நாள் விழா போட்டி; மாணவ, மாணவிகளுக்கு பரிசு
தமிழ்நாடு நாள் விழா போட்டி; மாணவ, மாணவிகளுக்கு பரிசு
தமிழ்நாடு நாள் விழா போட்டி; மாணவ, மாணவிகளுக்கு பரிசு
ADDED : ஜூலை 11, 2024 12:48 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது.தமிழ்த்துறை தலைவர் கற்பகம் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடத்த கட்டுரை போட்டியில், 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் பசுபதிபா-ளையம், ஸ்ரீசாரதா பெண்கள் மேனிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவி யாசினி முதல் பரிசு, பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவி சுபிகாஸ்ரீ இரண்டாம் பரிசு, காகிதபுரம் டி.என்.பி.எல். மெட்ரிக் மேனிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி காருண்யாஸ்ரீ மூன்றாம் பரிசு பெற்றனர்.பேச்சு போட்டியில், 45 மாணவ, மாணவிகள் கலந்து கொண்-டனர். அதில் காகிதபுரம் டி.என்.பி.எல். மெட்ரிக் மேல்நிலைப்-பள்ளி மாணவன் சரவணகுமார் முதல் பரிசு, குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி சுவேதா இரண்டாம் பரிசு, கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி, 7ம் வகுப்பு மாணவன் ஜெயசுதன் மூன்றாம் பரிசும் பெற்றனர். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.