/உள்ளூர் செய்திகள்/கரூர்/கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை மனுகடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை மனு
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை மனு
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை மனு
கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; அரசு விடுமுறை அளிக்க கோரிக்கை மனு
ADDED : ஜூலை 11, 2024 12:48 AM
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபி ேஷக விழாவை முன்னிட்டு, அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாகவும், காவிரி தென் கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோவில்.
மேலும், எட்டு கிராம சுவாமிகள் ஒரே இடத்தில் சந்திக்கும் தைப்பூச திருவிழா மேலும் சிறப்பு சேர்க்கிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வரும், 12ல் காலை 6:15 மணி-யளவில் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. சிறப்பு வாய்ந்த கோவில் கும்பாபிஷேகம் அன்று, மாவட்ட நிர்வாகம் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வ-லர்கள், குளித்தலை ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஷ்-வரன், எம்.எல்.ஏ., மாணிக்கம், கோவில் செயல் அலுவலர் சந்திர-சேகர், தாசில்தார் சுரேஷ் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.