/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : செப் 02, 2025 12:57 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில், இன்று பல்வேறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது.
இது குறித்து, கலெக்டர் தங்க வேல் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடக்கிறது. கரூர் மாநகராட்சி, 2வது வார்டுக்கு பெரியகுளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், பள்ளப்பட்டி நகராட்சியில் 8, 15வது வார்டுக்கு, டி.எம்.எச் நகர், சுல்தார் ஹபிபுல்லா மஹாலிலும், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., 9, 10, 11, 12, 13, 14, 15- ஆகிய வார்டுகளுக்கு தளவாபாளையம் மலையம்மன் திருமண மண்டபத்திலும், கரூர் வட்டாரத்தில், வேட்டமங்கலம் பஞ்.,பகுதிக்கு, நொய்யல் குறுக்கு சாலை அம்மையப்பர் மஹாலிலும், தான்தோன்றிமலை வட்டாரத்தில், காக்காவாடி பஞ்.,க்கு காக்காவாடி பஞ்., அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், சிந்தலவாடி மற்றும் கள்ளப்பள்ளி ஆகிய பஞ்.,க்கு லாலாபேட்டை சிவசக்தி திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில், பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.