/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விதிமீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை:மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி எச்சரிக்கை விதிமீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை:மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி எச்சரிக்கை
விதிமீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை:மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி எச்சரிக்கை
விதிமீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை:மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி எச்சரிக்கை
விதிமீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை:மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி எச்சரிக்கை
ADDED : செப் 02, 2025 12:59 AM
பள்ளிப்பாளையம், செப். 2
''விதி மீறும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிப்பாளையத்தில் நடந்த சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி எச்சரிக்கை விடுத்தார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாய ஆலைகளில் இருந்து விதிமீறி வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீர், நேரடியாக ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், அலர்ஜி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து புகார் சென்றதால், நேற்று பள்ளிப்பாளையம் ஆர்.எஸ்., சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில், பள்ளிப்பாளையம் வட்டார சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. குமாரபாளையம் மாசு காட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலைகளில் இருந்து விதிமீறி சாயக்கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆய்வின்போது, சாயக்கழிவுநீர் வெளியேற்றுவது கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் சாய ஆலைகள் செயல்பட வேண்டும். உரிமம் பெற்று விதிமீறி செயல்பட்டாலும், சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சம்பிரதாய கூட்டம்சாயக்கழிவுநீர் ஆற்றில் கலப்பது குறித்து புகார் வந்தால், ஒவ்வொரு முறையும் இதுபோல் சாய ஆலை உரிமையாளர்களை அழைத்து, மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் கூட்டம் நடத்துவர். ஆனால், நடவடிக்கை என்பது கண் துடைப்பாக இருக்கும். இதேபோல், நேற்று நடந்த கூட்டமும் சம்பிரதாயத்துக்கே நடந்தது. அதுவும், மதியம், 12:15 மணிக்கு துவங்கி, 12:30 மணிக்கெல்லாம் முடிந்து விட்டதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.