/உள்ளூர் செய்திகள்/கரூர்/பைக் டாக்சியால் வருவாய் இழப்பு:ஆட்டோ உரிமையாளர்கள் மனுபைக் டாக்சியால் வருவாய் இழப்பு:ஆட்டோ உரிமையாளர்கள் மனு
பைக் டாக்சியால் வருவாய் இழப்பு:ஆட்டோ உரிமையாளர்கள் மனு
பைக் டாக்சியால் வருவாய் இழப்பு:ஆட்டோ உரிமையாளர்கள் மனு
பைக் டாக்சியால் வருவாய் இழப்பு:ஆட்டோ உரிமையாளர்கள் மனு
ADDED : செப் 02, 2025 12:57 AM
கரூர்:பைக் டாக்சி காரணமாக, ஆட்டோக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்க நிர்வாகி ராஜா தலைமையில் ஓட்டுனர்கள், கரூர் கலெக்டரிம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், 2,500க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் இருந்து வருகிறோம். தற்போது விலைவாசி உயர்வால், ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கரூரில் பல இடங்களில் பைக் டாக்சி மூலம் புக்கிங் செய்வதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி, மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மினி பஸ்கள் குறிப்பிட்ட துாரத்திற்கு மேல் சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி விடுகின்றனர். ஷேர் ஆட்டோக்கள் பர்மிட் இல்லாத இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வருமானம் குறைந்து குடும்பத்தின் தேவைகளை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே, பைக் டாக்சியை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.