Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வீரராக்கியம் பிரிவில் எரியாத சிக்னல் விளக்குகளால் விபத்து அபாயம்

வீரராக்கியம் பிரிவில் எரியாத சிக்னல் விளக்குகளால் விபத்து அபாயம்

வீரராக்கியம் பிரிவில் எரியாத சிக்னல் விளக்குகளால் விபத்து அபாயம்

வீரராக்கியம் பிரிவில் எரியாத சிக்னல் விளக்குகளால் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 16, 2024 06:13 AM


Google News
கரூர் : கரூர் அருகே, வீரராக்கியம் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் எரியாமல் உள்ளதால், விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு உள்ளது. கரூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள், வீரராக்கியம் பிரிவு வழியாக செல்கிறது. இதனால், அந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர்.

அதை கண்டித்து, பலமுறை சாலை மறியல் போராட்டங்களுக்கும் நடந்துள்ளன. வீரராக்கியம் பிரிவில் உயர்மட்ட பாலம் கட்டும் கோரிக்கை கிடப்பில் உள்ளது. இந்நிலையில், வீரராக்கியம் பிரிவில் வாகனங்கள் மெதுவாக, நின்று செல்லும் வகையில் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டன. தற்போது, சிக்னல் விளக்குகள் சேதம் அடைந்த நிலையில் எரியாமல் உள்ளது.

மேலும், அந்த பகுதியில் வீடுகள் அதிகளவில் உள்ளது. வீரராக்கியம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பொதுமக்கள் வீரராக்கியம் பிரிவு வழியாக, பல்வேறு கிராம பகுதிகளுக்கு வாகனங்களில் செல்கின்றனர்.

இந்நிலையில், சிக்னல் விளக்குகள் எரியாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வீரராக்கியம் பிரிவில், சிக்னல் விளக்குகளை எரிய வைக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us