/உள்ளூர் செய்திகள்/கரூர்/பஸ் ஸ்டாண்ட் வெளியே தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்புபஸ் ஸ்டாண்ட் வெளியே தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் வெளியே தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் வெளியே தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு
பஸ் ஸ்டாண்ட் வெளியே தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 16, 2024 06:13 AM
குளித்தலை : பஸ் ஸ்டாண்ட் வெளியே தனியார் பஸ்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும், காந்தி சிலை வழியாக குளித்தலை பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வது வழக்கம். திருச்சியில் இருந்து வரும் தனியார் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் உள்பகுதிக்கு செல்லாமல் நேரடியாக சாலையில் நிறுத்தப்படுவதால், கரூர், கோவை, முசிறி, மணப்பாறை மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் உள்பகுதிக்கும் மற்றும் திருச்சி மார்க்கத்திற்கும் செல்ல முடியாமல் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், தனியார் பஸ்கள் வெளிப்பகுதியில் நிறுத்துவதால், பொதுமக்களுக்கும், கார் ஓட்டுனர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
தனியார் பஸ்கள் விதிமுறைகளை பின்பற்றாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. திருச்சி மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து தனியார் பஸ்களும், குளித்தலை பஸ் ஸ்டாண்ட் உள்பகுதிக்கு சென்று வர வேண்டும். பயணிகளை ஏற்றி, இறக்கி விடவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.