Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1.34 கோடி நிதி வழங்கல்

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1.34 கோடி நிதி வழங்கல்

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1.34 கோடி நிதி வழங்கல்

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1.34 கோடி நிதி வழங்கல்

ADDED : ஜூன் 16, 2024 06:14 AM


Google News
கரூர : கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 7 அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், 1.31 கோடி ரூபாய் மதிப்பில் பெரு நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதியின் மூலம் பெறுவதற்கு, பவர்கிரிட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம், கிராமப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளின் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். அப்பகுதியிலுள்ள மக்கள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை பெறமுடியும்.

இவ்வாறு பேசினார்.

கரூர் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் ராஜா, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் சுதர்சனா ஜேசுதாஸ், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் சந்தோஷ்குமார், பவர்கிரிட் நிறுவன முதுநிலை துணை பொது மேலாளர் குணசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us