/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாலக்கரை மார்க்கெட் செல்ல டவுன் பஸ் இயக்க கோரிக்கைபாலக்கரை மார்க்கெட் செல்ல டவுன் பஸ் இயக்க கோரிக்கை
பாலக்கரை மார்க்கெட் செல்ல டவுன் பஸ் இயக்க கோரிக்கை
பாலக்கரை மார்க்கெட் செல்ல டவுன் பஸ் இயக்க கோரிக்கை
பாலக்கரை மார்க்கெட் செல்ல டவுன் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
குளித்தலை : திருச்சி பாலக்கரை மார்க்கெட்டுக்கு செல்ல, அதிகாலை நேரத்தில் டவுன் பஸ் விட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.குளித்தலையிலிருந்து அதிகாலை, 4:00 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ் சென்று வந்தது.
இதனால் பல சிறு காய்கறி வியாபாரிகள் பயன் பெற்று வந்தனர்.தற்சமயம் அரசு டவுன் பஸ் தாமதமாக, 5:30 மணிக்கு பிறகு வருவதால் குளித்தலை, பெட்டவாய்த்தலை பகுதி வியாபாரிகள் சர்வீஸ் பஸ்சில் சென்று விடுகின்றனர்.மேலும், குமாரமங்கலம், காவல்காரபாளையம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, எலமனுார் என அப்பகுதியில் வசிக்கும் சிறு வியாபாரிகளின், உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளை விற்பனை செய்யமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அதிகாலை நேரத்தில், டவுன் பஸ் இயக்காததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என, விவசாயிகள் புலம்புகின்றனர்.