கரூர் நீதிமன்றத்தில் யோகா தின விழா
கரூர் நீதிமன்றத்தில் யோகா தின விழா
கரூர் நீதிமன்றத்தில் யோகா தின விழா
ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
கரூர் : கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், உலக யோகா தின விழா, கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட அமர்வு தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில், நீதிபதிகள், வக்கீல் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.
விழாவில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சொர்ணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் தலைமையில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. யோகா ஆசிரியர் ராஜேந்திரன் பல்வேறு ஆசனங்களை செய்து காட்டி பயிற்சி அளித்தார். மாநில பட்டியல் அணி தலைவர் சிவபிரகாசம், மாவட்ட துணைத்தலைவர் செல்வம், பொதுச்செயலாளர் ஆறுமுகம், நகர தலைவர்கள் முருகேசன், வடிவேல் உள்ளிட்ட, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.