சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை
சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை
சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
தான்தோன்றிமலை: கரூர் அருகே, அப்பிப்பாளையத்தில் அரசு பள்ளி பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் இருந்த உபகரணங்கள் தற்போது சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள், பூங்காவில் துணிகளை காய வைக்கின்றனர். எனவே, அப்பிப்பாளையத்தில், அரசு பள்ளி பகுதியில் உள்ள பூங்காவை சீரமைத்து, புதிய விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.