/உள்ளூர் செய்திகள்/கரூர்/வாகன பழுது பார்ப்போர் சங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுவாகன பழுது பார்ப்போர் சங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
வாகன பழுது பார்ப்போர் சங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
வாகன பழுது பார்ப்போர் சங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
வாகன பழுது பார்ப்போர் சங்கம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு
ADDED : ஜூலை 10, 2024 06:58 AM
கரூர்: கரூரில், அரசுக்கு சொந்தமான இடத்தை ஒதுக்கி, வாகன பழுது பார்ப்போர் நகர் அமைத்து தர வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட அனைத்து கனரக வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினர், மாவட்ட தலைவர் சேகர் தலைமையில், கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.அதில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உள்ளனர்.
லாரிகளை சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்து, பழுது பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சிலர் வாடகைக்கு இடம் பிடித்து, தொழில் செய்து வருகிறோம். சாலை ஓரத்தில் லாரிகளை நிறுத்தி பழுது பார்க்கும் போது, காவல் துறை, மாநகராட்சி அதிகாரிகளால் இன்னலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே, கரூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஒதுக்கி, வாகன பழுது பார்ப்போர் நகர் அமைத்து தர வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.