/உள்ளூர் செய்திகள்/கரூர்/சேதமடைந்த நிழற்கூடம்: பராமரிக்க நடவடிக்கை தேவைசேதமடைந்த நிழற்கூடம்: பராமரிக்க நடவடிக்கை தேவை
சேதமடைந்த நிழற்கூடம்: பராமரிக்க நடவடிக்கை தேவை
சேதமடைந்த நிழற்கூடம்: பராமரிக்க நடவடிக்கை தேவை
சேதமடைந்த நிழற்கூடம்: பராமரிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 10, 2024 06:58 AM
கரூர்: நெரூரில், சேதமடைந்த நிலையில் நிழற்கூடம் இருப்பதால், கோவில் வரும் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.கரூர் மாவட்டம், நெரூரில் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் உள்ளது.
இங்கு, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த அதிஷ்டானத்துக்கு அரசியல்வாதிகள், திரையுல பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால், கரூர் மாவட்டத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக நெரூர் மாறி வருகிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் சில ஆண்டுகளுக்கு முன் நிழற்கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.சரியான பராமரிப்பில்லாததால், நிழற்கூடம் பயன்பாடின்றி உள்ளது. அதன் கான்கிரீட் சிமென்ட பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. அதில், நிற்க பயணிகள் அச்சப்பட்டு சாலையில் நிற்கின்றனர். நிழற்கூடத்தை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பதோடு, அதை முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.