/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பதவி பறிக்கும் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: எம்.பி., சிவா பேச்சு பதவி பறிக்கும் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: எம்.பி., சிவா பேச்சு
பதவி பறிக்கும் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: எம்.பி., சிவா பேச்சு
பதவி பறிக்கும் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: எம்.பி., சிவா பேச்சு
பதவி பறிக்கும் சட்டத்தை எதிர்த்து போராட்டம்: எம்.பி., சிவா பேச்சு
ADDED : செப் 21, 2025 01:33 AM
கரூர் :''பிரதமர், மத்திய அமைச்சர், முதல்வர் உள்பட ஒரு மாதம் சிறையில் இருந்தால் பதவி பறிபோகும் என்ற சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறோம்,'' என, ராஜ்யசபா எம்.பி., சிவா பேசினார்.
கரூரில், தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., சிவா பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் பள்ளியில் காலை உணவு, இலவச பஸ் பாஸ், இலவச புத்தகம் உள்பட பல திட்டங்கள் உள்ளன. அரசு பள்ளியில் இருந்து உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பெண்களுக்கு ஊக்கம் தரும் திட்டங்களே தவிர, இவை இலவச திட்டங்கள் இல்லை. இதனால், ஒரு கோடி குடும்பங்கள் தி.மு.க.,வில் உறுப்பினராக இணைந்துள்ளனர்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று வாழும் நாட்டை சிதைத்து வருகின்றனர். பிரதமர், மத்திய அமைச்சர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் குற்றச்சாட்டே இல்லாமல் பதவி நீக்கம் செய்யும் வினோத சட்டம் வர இருக்கிறது.
அவர்கள், ஒரு மாதம் சிறையில் இருந்தால் பதவி பறிபோகும் என்ற சட்டம் உள்பட பல சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறோம். இந்த நாட்டில் யார் பாதிக்கப்பட்டாலும், தி.மு.க., குரல் ஒலித்து கொண்டே இருக்கும்.இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகர செயலர் கனகராஜ், மாநகர பகுதி செயலர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.