/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள் காணொலியில் முதல்வர் திறப்பு மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள் காணொலியில் முதல்வர் திறப்பு
மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள் காணொலியில் முதல்வர் திறப்பு
மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள் காணொலியில் முதல்வர் திறப்பு
மாவட்டத்தில் பள்ளி கட்டடங்கள் காணொலியில் முதல்வர் திறப்பு
ADDED : செப் 21, 2025 01:33 AM
கரூர் :கரூர் மாவட்டத்தில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டார். இப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், 10 வகுப்பறை கட்டடங்கள், 2.12 கோடி ரூபாய் மதிப்பில் திறந்து வைக்கப்பட்டது. குளித்தலை வட்டம், கீழவெளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 6 வகுப்பறை கட்டடங்கள், 1.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள், 1.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் திறக்கப்பட்டது.
ராச்சாண்டார் திருமலை அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், 10 வகுப்பறை கட்டடங்கள், 2.47 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரவக்குறிச்சி வட்டம், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 8 வகுப்பறை கட்டடங்கள், 1.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணராயபுரம் வட்டம், தம்மாநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2 வகுப்பறை கட்டடங்கள், 49.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் பல புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) திருநாவுக்கரசு, தாசில்தார் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.