/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஜப்பான் பல்கலை கழகத்திற்கு பயணம் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பாராட்டு ஜப்பான் பல்கலை கழகத்திற்கு பயணம் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பாராட்டு
ஜப்பான் பல்கலை கழகத்திற்கு பயணம் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பாராட்டு
ஜப்பான் பல்கலை கழகத்திற்கு பயணம் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பாராட்டு
ஜப்பான் பல்கலை கழகத்திற்கு பயணம் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 21, 2025 01:34 AM
கரூர் :கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், ஜப்பான் அரசின் சகுரா அறிவியல் பரிமாற்ற திட்டம் தொடர்பாக நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, ஜப்பான் நாட்டின் நிப்பான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், இக்கல்லுாரியில் இருந்து 7 மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் ஒரு வாரம் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இதனால், மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி அனுபவம், பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் உயர்ந்த கல்விசார் திறன் வளர்ச்சி ஆகிய திறன்களை பெற உதவியாக உள்ளது.
மேலும், உலக தரமிக்க தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து மாணவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், புதுமையான கற்பித்தல் முறைகள், சர்வதேச ஒத்துழைப்பு திறன்கள் ஆகியவற்றை கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர். புதிய சிந்தனைகள், உலகளாவிய பார்வைகள் மற்றும் புதுமை உணர்வுகளை வழங்கி, கல்வித் திறனை மேம்படுத்துவதோடு, கல்லுாரியின் சிறந்த கல்வி நோக்கத்திற்கும் பங்களிப்பாக இருக்கும்.
இந்த பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரை கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், எஸ்.எஸ்.ஜே.எல்.டி.சி. தலைமை வழிகாட்டி அசோக் ஷங்கர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.