/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பயிற்சிகரூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பயிற்சி
கரூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பயிற்சி
கரூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பயிற்சி
கரூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பயிற்சி
ADDED : ஜூன் 22, 2024 12:50 AM
கரூர் : கரூர் தீயணைப்பு நிலையம் சார்பில், பெரிய ஆண்டாங்கோவில், அமராவதி ஆற்றுப்பகுதியில் ஒத்திகை பயிற்சி முகாம் நேற்று நடந்தது.அதில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடையும் போதும், அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் போதும், மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து பேசினார்.ஆற்றில் பொதுமக்கள் தவறி விழும் போது, அவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து, பல்வேறு உபகரணங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சியை நடித்து காட்டினர்.
மாவட்ட துணை தீயணைப்பு அலுவலர் திருமுருகன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.