ADDED : ஜூன் 22, 2024 12:50 AM
கரூர் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் செல்வராணி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.அதில், தி.மு.க., தேர்தல் அறிக்கையின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன.போராட்டத்தில் டி.என்.ஜி.இ.ஏ., மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட தலைவர் அன்பழகன், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சிவகாமி, தனலட்சுமி உள்பட, பலர் பங்கேற்றனர்.