/உள்ளூர் செய்திகள்/கரூர்/அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்: கூடுதல் பஸ் இயக்க பொது மக்கள் கோரிக்கைஅரசு பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்: கூடுதல் பஸ் இயக்க பொது மக்கள் கோரிக்கை
அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்: கூடுதல் பஸ் இயக்க பொது மக்கள் கோரிக்கை
அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்: கூடுதல் பஸ் இயக்க பொது மக்கள் கோரிக்கை
அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்: கூடுதல் பஸ் இயக்க பொது மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 12:50 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, தேசியமங்கலம், ஆதனுார், கழுகூர் மற்றம் சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் தோகைமலை, மணப்பாறை அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இதேபோல், அப்பகுதி மக்கள் கட்டுமான தொழில், அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு பஸ்களில் வேலைக்கு செல்லும் போது பொது மக்கள் கூட்டம் அதிகளவு இருந்து வருகிறது.காலையில் பள்ளிக்கு செல்லும் போது, குளித்தலையில் இருந்து மணப்பாறை நோக்கி இயக்கப்படும் பஸ்கள் குறைந்தளவே இருப்பதால், மாணவ, மாணவிகள், பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், அரசு பஸ்சில் அதிகளவு மாணவர்கள் பயணம் செய்வதால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே தோகைமலை, மணப்பாறை செல்லும் பஸ்கள் கூடுதலாக விடவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.