/உள்ளூர் செய்திகள்/கரூர்/புறக்காவல் நிலையத்தில் போலீஸ் பணி தேவைபுறக்காவல் நிலையத்தில் போலீஸ் பணி தேவை
புறக்காவல் நிலையத்தில் போலீஸ் பணி தேவை
புறக்காவல் நிலையத்தில் போலீஸ் பணி தேவை
புறக்காவல் நிலையத்தில் போலீஸ் பணி தேவை
ADDED : ஜூன் 11, 2024 06:52 AM
கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் திருடர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியாற்ற வேண்டும்.
தொழில் நகரமான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், கரூர் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக, பஸ் ஸ்டாண்டில் பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
பஸ் ஸ்டாண்ட் புறக்காவல் நிலையத்தில் போலீசார் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதனால், பிக்பாக்கெட் திருடர்கள் அதிகரித்துள்ளனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து விளக்குகளையும், எரியும்படி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புறக்காவல் நிலையத்தில், நாள்தோறும் போலீசாரை, பணியில் நியமிக்க வேண்டியது அவசியம்.