/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் மட்டைகள் காய்ச்சல் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரிப்புசாலையோரத்தில் வீசப்படும் இளநீர் மட்டைகள் காய்ச்சல் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரிப்பு
சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் மட்டைகள் காய்ச்சல் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரிப்பு
சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் மட்டைகள் காய்ச்சல் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரிப்பு
சாலையோரத்தில் வீசப்படும் இளநீர் மட்டைகள் காய்ச்சல் பரப்பும் கொசு உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூன் 11, 2024 06:52 AM
கரூர் : கரூரில் பயன்படுத்தப்பட்ட இளநீர் மட்டைகள் சாலையில் வீசப்படுவதால், அதில் காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட காரணங்களால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சலை கட்டு படுத்த, பல்வேறு விழிப்புணர்வு விழிப் புணர்வு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், மலேரியா, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும், கொசு உற்பத்தியை அதிகரிக்கும் இளநீர் மட்டைகள் மற்றும் குடுவைகளை சேமித்து வைக்க கூடாது என, தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கரூர் நகரில் கோவை சாலை, உழவர் சந்தை சாலை, தின்னப்பா நகர் சாலை, வெங்க மேடு சாலை, மதுரை சாலை, தான்தோன்றி மலை உள்ளிட்ட பகுதிகளில், 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இளநீர் விற்பனை செய்கின்றனர்.
ஆனால், பொதுமக்கள் இளநீரை அருந்திய பிறகு, மட்டைகள், குடுவைகளை அப்புறபடுத்தாமல், அதே இடத்தில் போட்டு விட்டு வியாபாரிகள் சென்று விடுகின்றனர்.
தற்போது, கரூர் நகரில் மழை பெய்து வருவதால், வீசப்பட்ட இளநீர் மட்டைகள், குடுவைகளில் மழை நீர் தேங்குகின்றன. அதில் காய்ச் சலை ஏற்படுத்தும் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், சாலை யோரம் வீசப் பட்ட இளநீர் மட்டைகள், குடுவைகளை, கரூர் மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றி, சம்பந்தப்பட்ட இளநீர் வியாபாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.