ADDED : ஜூன் 30, 2025 04:33 AM
காங்கேயம்: மைல்கல்லில் மோதி பைக்கில் சென்ற போலீஸ் ஏட்டு பலியானார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த முருகம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி, 40; கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவு தலைமை காவலர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, புல்லட் பைக்கில் ஊர் திரும்-பினார்.
திருப்பூர் மாவட்டம் முத்துார், ஊடையம் ரோடு வேப்பமரம் பகு-தியில் நேற்று காலை, 7:00 மணியளவில் சென்றார். சாலை வளைவில் கட்டுப்பாட்டை
இழந்த பைக், சாலையோர காட்டுக்குள் பாய்ந்தது. அப்போது மைல் கல்லில்
தலை மோதியதில் பலத்த காயமடைந்து பலியானார்.
வெள்ளகோவில் போலீசார் சடலத்தை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ஏட்டு பூபதிக்கு மனைவி இந்துமதி மற்றும் 10 வயதில் மகன், ௮ வயதில் மகள் உள்ளனர்.