பள்ளி சிறுவனை தாக்கிய 5 பேர் கைது
பள்ளி சிறுவனை தாக்கிய 5 பேர் கைது
பள்ளி சிறுவனை தாக்கிய 5 பேர் கைது
ADDED : ஜூலை 01, 2025 12:58 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் இடையபட்டி பஞ்., சோனாம நாயக்கனுாரை சேர்ந்த, 17 வயது மாணவன் நந்தகுமார், கடந்த, 27ம் தேதி இரவு 10:00 மணியளவில் புங்கம்பாடி வடபுறத்தில் உள்ள, தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த கண்ணன், 43. கனகராஜ், 26, ஜன மோகன்ராஜ், 20, இளம்மதிராஜா, 20, செல்வராஜ், 45, ஆகிய ஐந்து பேர் ஒன்று சேர்ந்து மண் எடுப்பது பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிறுவன், இங்கு மண் எடுக்கக்கூடாது என்றார். இதனால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் சேர்ந்து, சிறுவனை தகாத வார்த்தையால் பேசி திட்டி, தாக்கினர். பாதிக்கப்பட்ட சிறுவன் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார்
வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.