/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜூன் 30, 2025 04:33 AM
கரூர்: வெங்கமேடு அருகில், சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்குப்பட்ட வெங்கமேடு தீரன் நகரில், ஏராள-மான குடியிருப்புகள் உள்ளன. இது மாநகராட்சி எல்லை பகுதி என்பதால், தினமும் குப்பை சேகரிக்க பணியாளர்கள் வருவது கிடையாது. இதனால், அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் குப்பை கொட்டு-கின்றனர். இவற்றை உடனடியாக அகற்ற, மாநகராட்சி நடவ-டிக்கை மேற்கொள்வதில்லை. அள்ளி செல்ல முடியாத அளவுக்கு குப்பை குவிந்து கிடப்பதால், தீ வைத்து விடுகின்றனர். இதனால், சாலை புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
இரு சக்கரவாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். சுற்றுச்
சூழலை காக்கவேண்டிய மாநகராட்சி நிர்வாகமே, குப்பைக்கு தீ வைப்பதை அனுமதிப்பதாக, மக்கள் புலம்புகின்றனர்.
இனியாவது, கொட்டப்படும் குப்பையை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.