Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/காவிரியாற்று பகுதியில் உயிரிழப்பை தடுக்க எச்சரிக்கை போர்டு வைப்பு

காவிரியாற்று பகுதியில் உயிரிழப்பை தடுக்க எச்சரிக்கை போர்டு வைப்பு

காவிரியாற்று பகுதியில் உயிரிழப்பை தடுக்க எச்சரிக்கை போர்டு வைப்பு

காவிரியாற்று பகுதியில் உயிரிழப்பை தடுக்க எச்சரிக்கை போர்டு வைப்பு

ADDED : ஜூலை 31, 2024 12:04 AM


Google News
கரூர்: காவிரியாற்று பகுதிகளில், குளிக்கும் போது உயிரிழப்பதை தடுக்கும் வகையில், எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

தற்-போது, நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 81,500 கன அடி உபரி நீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது.வரும் நாட்-களில், தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நொய்யல், தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், திருமுக்கூடலுார், கட்டளை, மாயனுார், குளித்தலை பகுதி-களில் பொது மக்கள் காவிரியாற்றில் துணிகள் துவைக்கவும் குளிக்கவும் செல்கின்றனர். பல ஆண்டுகளாக, காவிரியாறு ஆற்றுப்பகுதிகளில் மணல் அள்ளப்பட்டதால், பல இடங்களில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால், தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பள்ளங்கள் மறைந்துள்ளது.இதனால், காவிரியாற்று பகுதி களில் உயிரிழப்பை தடுக்கும் வகையில், பொதுமக்கள் குளிக்கும் இடங்களில், திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டம் நீர்வ-ளத்துறை சார்பில், விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us