/உள்ளூர் செய்திகள்/கரூர்/குடிநீர் பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம்குடிநீர் பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம்
குடிநீர் பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம்
குடிநீர் பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம்
குடிநீர் பிரச்னையை சரி செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:49 AM
குளித்தலை: குடிநீர் பிரச்னையை சரி செய்ய கோரி, கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.குளித்தலை அடுத்த கே.பேட்டை பஞ்., திம்மாச்சிபுரம் இரண்-டாவது வார்டு பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக, இப்பகுதியில் குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தபோதும், மின் மோட்டார் பழுது ஏற்பட்-டுள்ளதாகவும், கூடிய விரைவில் சரி செய்து தருவதாகவும் கூறி வந்துள்ளார். மேலும் கேப்பேட்டை ஊராட்சி, இரண்டாவது வார்டு பகு-தியில் கழிவுநீர் வடிகால் வசதி, மயான பாதைக்கு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல் இருந்து வந்ததால், நேற்று காலை 8:00 மணியளவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து காலி குடங்க-ளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.லாலாபேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, 'இன்று மதியத்-திற்குள் பழுது பிரச்னைகளை சரி செய்து, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்-டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறங்க-ளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.