/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செயல்படாத 'சிசிடிவி' கேமராக்கள்:அ.குறிச்சியில் பாதுகாப்பு கேள்விக்குறி செயல்படாத 'சிசிடிவி' கேமராக்கள்:அ.குறிச்சியில் பாதுகாப்பு கேள்விக்குறி
செயல்படாத 'சிசிடிவி' கேமராக்கள்:அ.குறிச்சியில் பாதுகாப்பு கேள்விக்குறி
செயல்படாத 'சிசிடிவி' கேமராக்கள்:அ.குறிச்சியில் பாதுகாப்பு கேள்விக்குறி
செயல்படாத 'சிசிடிவி' கேமராக்கள்:அ.குறிச்சியில் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : செப் 01, 2025 02:17 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி பகுதிகளில் போலீசார் சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் செயல்படாததால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீசார் சார்பில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்தை கண்காணிக்கவும், அரவக்குறிச்சியின் முக்கிய பகுதிகளான பஸ் ஸ்டாப், ஏ.வி.எம்., கார்னர், தாசில்தார் அலுவலகம், அண்ணா நகர் ரவுண்டானா, பள்ளப்பட்டி ஷா நகர் கார்னர், கடைவீதி, புங்கம்பாடி கார்னர் உள்ளிட்ட போக்குவரத்து அதிகமுள்ள இடங்கள் மற்றும் முக்கிய சாலைகள் அனைத்திலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் மூலம், சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட பல நபர்கள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளப்பட்டி கடைவீதியிலும், அண்ணா நகர் ரவுண்டானா, புங்கம்பாடி கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் உடைந்து காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கேமராக்கள் இயங்காததால், பல்வேறு பகுதி களில் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
எனவே, அரவக்குறிச்சி போலீசார் ஆய்வு செய்து, செயல்படாமல் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை அகற்றிவிட்டு, புதிய கேமராக்கள் பொருத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.