/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிணற்றில் தவறி விழுந்தகல்லுாரி மாணவர் சாவு கிணற்றில் தவறி விழுந்தகல்லுாரி மாணவர் சாவு
கிணற்றில் தவறி விழுந்தகல்லுாரி மாணவர் சாவு
கிணற்றில் தவறி விழுந்தகல்லுாரி மாணவர் சாவு
கிணற்றில் தவறி விழுந்தகல்லுாரி மாணவர் சாவு
ADDED : செப் 01, 2025 02:18 AM
குளித்தலை;குளித்தலை அடுத்த பாப்பையம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 44; கூலி தொழிலாளி. இவரது மகன் முத்துமணி, 18. வெள்ளியனை தனியார் கல்லுாரியில், பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, பாப்பையம்பாடி மதுரை வீரன் கோவில் அருகே உள்ள கிணற்றில் நண்பர்களுடன் நீச்சல் பழகி கொண்டிருந்தார். படியில் நின்றிருந்த முத்துமணி கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நண்பர்கள் கிணற்றில் தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, சம்பவ இடத்துக்கு வந்த முசிறி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் நீண்ட நேரம் தேடி முத்துமணியை சடலமாக மீட்டனர். தாய் விஜயலட்சுமி கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து
வருகின்றனர்.