Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ADDED : செப் 22, 2025 01:46 AM


Google News
கரூர்:முஸ்லிம் மாணவ-, மாணவியர் வெளிநாடு சென்று படிக்க, கல்வி உதவித்தொகை பெற அக்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில் வெளிநாடு சென்று படிக்க முஸ்லிம் மாணவ-, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, நடப்பு கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க, உலக தரவரிசையில், 250 இடங்களுக்குள் உள்ள பல்கலையில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்; பட்டப் படிப்பில், 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம் உள்பட முதுகலை பட்டபடிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில், https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம் முதல் தளம் சேப்பாக்கம், சென்னை--600005 என்ற முகவரிக்கு அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us