/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ADDED : செப் 22, 2025 01:45 AM
கரூர்:மஹாளய அமாவாசையையொட்டி, கரூர் காவிரி ஆற்றங்கரையில் முன்னோருக்கு தர்ப்-பணம் கொடுக்க மக்கள் திரண்டனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, 'மஹாளய அமாவாசை' என, அழைக்கப்படுகிறது. ஆவணி மாத பவுர்ணமிக்கு பின் வரும் பிரதமை நாள் தொடங்கி, அடுத்து வரும், 15 நாட்களும், 'மஹாளய பட்சம்' என்று சொல்லப்படுகிறது. மஹாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மஹாளய அமாவாசையாகும். இந்த மஹாளயபட்ச, 15 நாட்களில் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், பூமியில் உள்ள அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுகிறது. அது தவிர ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கின்றனர். இவ்வாறு, முன்னோர் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மஹாளய பட்சத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.அதன்படி, நேற்று மஹாளய அமாவாசை முன்னிட்டு கரூர் மாவட்டம், காவிரி ஆற்றங்க-ரையை ஒட்டிய தளவாபாளையம், நெரூர், மாயனுார், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகு-திகளில் நேற்று தர்ப்பணம் கொடுத்தனர். காலை, 5:00 மணி முதல் ஏராளமானோர் குடும்-பத்துடன் வந்து, காவிரி ஆற்றில் நீராடிய பின், வாழை இலையில் பழம், வெற்றிலை பாக்கு, கருப்பு எள், அரிசி ஆகியவற்றை கொண்டு ஏரா-ளமானோர் வரிசையாக அமர்ந்து முன்னோர்க-ளுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
* இதேபோல், குளித்தலை கடம்பன் துறை, லாலாபேட்டை காவிரி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மாயனுார், மதுக்கரை செல்லாண்டியம்மன் காவிரி ஆற்று படுகை, லாலாப்பேட்டை, கருப்பத்துார் ஆகிய காவிரி ஆற்று படுகை பகுதிகளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.