/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முதியோருக்கு மொபைல் செயலி: கலெக்டர் தகவல் முதியோருக்கு மொபைல் செயலி: கலெக்டர் தகவல்
முதியோருக்கு மொபைல் செயலி: கலெக்டர் தகவல்
முதியோருக்கு மொபைல் செயலி: கலெக்டர் தகவல்
முதியோருக்கு மொபைல் செயலி: கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 23, 2025 05:23 AM
கரூர்: கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:
சமூக நலத்துறை சார்பில் முதியோருக்கு மொபைல் செயலி மற்றும் https://seniorcitizen. tnsocialwelfare.tn.gov.in என்ற இணைய-தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன. முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில திட்-டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விபரம் உள்பட பல விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
அவர்களின் குறைகளை தெரிவிக்க, செயலியில் வழிவகை செய்-யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் நலன் தொடர்பான விபரங்க-ளுக்கு, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலு-வலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கரூர் என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.