/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர் மாவட்டத்தில் 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்
மாவட்டத்தில் 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்
மாவட்டத்தில் 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்
மாவட்டத்தில் 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை: கலெக்டர்
ADDED : செப் 21, 2025 01:31 AM
கரூர் :நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம், 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகில், பாலவிடுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் முகாமை ஆய்வு செய்த பின், கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் மருத்துவ முகாம், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலக்காக கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடக்கிறது. இந்த முகாம்களின் மூலம், 3,328 ஆண்கள், 5,249 பெண்கள் உள்ளிட்ட மொத்தம், 8,719 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக 8 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், காச நோயால் பாதிக்கப்பட்ட மூவருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) செழியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கயர்கரசி உள்பட பலர் பங்கேற்றனர்.