/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஹிந்து முன்னணி சார்பில் நோட்டு, பேனா வழங்கல் ஹிந்து முன்னணி சார்பில் நோட்டு, பேனா வழங்கல்
ஹிந்து முன்னணி சார்பில் நோட்டு, பேனா வழங்கல்
ஹிந்து முன்னணி சார்பில் நோட்டு, பேனா வழங்கல்
ஹிந்து முன்னணி சார்பில் நோட்டு, பேனா வழங்கல்
ADDED : செப் 21, 2025 01:32 AM
குளித்தலை :இனுங்கூரில், ஹிந்து முன்னணி நிறுவன தலைவர் மறைந்த ராம கோபாலன், 98வது பிறந்த தின விழாவை முன்னிட்டு. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கி நோட்டு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குளித்தலை அடுத்த இனுங்கூர் பஸ் நிறுத்தத்தில் குளித்தலை ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பில் நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலர்கள் கலியமூர்த்தி, நவீன் ஆகியோர் தலைமை வகித்து ராமகோபாலன் குறித்து விளக்கமளித்தனர்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டு, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவைகளை ஒன்றிய செயலர்கள் வழங்கினர். ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.