/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளத்துப்பாளையம் பிரிவு சாலையில் போக்குவரத்தை முறைப்படுத்தலாமே குளத்துப்பாளையம் பிரிவு சாலையில் போக்குவரத்தை முறைப்படுத்தலாமே
குளத்துப்பாளையம் பிரிவு சாலையில் போக்குவரத்தை முறைப்படுத்தலாமே
குளத்துப்பாளையம் பிரிவு சாலையில் போக்குவரத்தை முறைப்படுத்தலாமே
குளத்துப்பாளையம் பிரிவு சாலையில் போக்குவரத்தை முறைப்படுத்தலாமே
ADDED : செப் 21, 2025 01:32 AM
கரூர் :கரூர், குளத்துப்பாளையம் பிரிவு அருகே வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, வெங்கமேடு அருகே குளத்துப்பாளையம் பகுதிக்கான சாலை பிரிகிறது. இந்த பிரிவு சாலையோரம் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும், அதிகளவு குடியிருப்புகளும் உள்ளன. இங்கு, அதிகளவு வாகன போக்குவரத்து நடக்கிறது.
மேலும், வாகனங்கள் பிரிவு சாலையை ஒட்டி குறுக்கே செல்வதால், மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் அடிக்கடி சிறு விபத்துகள் நடந்து வருகிறது. குளத்துப்பாளையம் பிரிவு அருகே வாகனங்களின் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே, வாகனங்கள் எளிதாக செல்ல தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை தேவை.