/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் இறுதி கட்ட பணி ஆய்வுரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் இறுதி கட்ட பணி ஆய்வு
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் இறுதி கட்ட பணி ஆய்வு
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் இறுதி கட்ட பணி ஆய்வு
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் இறுதி கட்ட பணி ஆய்வு
ADDED : ஜூன் 04, 2024 03:59 AM
குளித்தலை: அய்யர்மலை, ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் (கம்பி வடஊர்தி) இறுதிகட்ட பணியை ஹிந்து சமய அறநிலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
குளித்தலை அடுத்த, சத்தியமங் கலம் பஞ்., அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள் ளது. சிவாலயங்களில் சிறந்த ஸ்தலமாக விளங்குகிறது. கடல் மட்டத்திலிருந்து, 1,117 அடி உயரத்திலும், செங்குத்தாக, 1,017 படிகள் கொண்டது. பக்தர்கள் படி ஏறியும், டோலியில் துாக்கி கொண்டும் மலை உச்சியில் உள்ள ரத்தினகிரீஸ்வரரை வணங்கி வருகின்றனர்.
மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய முடியாத குழந்தை கள், முதியோர் நலன் கருதி கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ., மாணிக்கம், மறைந்த முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்தார். இதையடுத்து கோவிலுக்கு ரோப் கார் அமைக்க உத்தரவிடப்பட்டது. ரோப் கார் பணி முடியும் தருவாயில் உள்ளது.
தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை பொறியாளர் பெரியசாமி, நேற்று மதியம் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் காத்திருப்பு அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, டிக்கெட் வழங்கும் மையம், மாற்றுத்திறனாளிகள் சாய்வு தளம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மலை உச்சியில் உள்ள ரோப் கார் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.
எம்.எல்.ஏ., மாணிக்கம், ஹிந்து சமய கண்காணிப்பு பொறியாளர் லால்பகதுார், திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை, மண்டல பொறியாளர் ஆனந்தராஜ், கோவில் செயல் அலுவலர்கள் அமர்நாதன், தங்கராஜூ மற்றும் பொறியாளர்கள், தி.மு.க., ஒன்றிய செயலர் சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ரோப் கார் பணி வரும், 10 நாட்களுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என எல்.எல்.ஏ.,மாணிக்கம், தலைமை பொறியாளரிடம் கோரிக்கை விடுத்தார்.