/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2024 03:59 AM
கரூர்: கரூர் வெண்ணமலை அருகில் உள்ள, அன்புகரங்கள் மையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 101வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் வடக்கு நகர தி.மு.க., சார்பில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர பகுதி செயலர் கணேசன் தலைமை வகித்தார்.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,இளங்கோ ஆகியோர், மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் மனோகரா ரவுண்டானாவில், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட இளைஞரணி செயலர் சக்திவேல், பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகில், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலர் சசிக்குமார் தலைமையில், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மாயனுார் பஸ் ஸ்டாப் அருகில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலர் ரவிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.