/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாயனுார் கதவணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்புமாயனுார் கதவணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனுார் கதவணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூலை 30, 2024 11:57 PM
கரூர்: மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால், மாயனுார் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி உள்ளன.
அந்த அணை-களின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரில் கடந்த இரு வாரங்களாக வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலிருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.கரூர் மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு, 17,306 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இது முழு-வதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றுப்-பகுதியில் கரையோர பகுதியில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும், புகைப்-படம் எடுக்கவும் கூடாது என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமரா-வதி அணைக்கு, 3,651 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கி-றது. இதில், 3,233 கன அடி அமராவதி ஆற்றிலும், 460 கன அடி பாசன வாய்க்கால்களில் திறக்கப்பட்டு வருகிறது. கரூர் அருகில், ஆண்டாங்கோவில் அமராவதி தடுப்பணையில், 960 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.