Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நிதி நிறுவன ஊழியர் கொலையில் திடுக் தகவல் கனவில் வந்த உத்தரவால் கும்பல் வெறியாட்டம்; 8 பேர் கைது

நிதி நிறுவன ஊழியர் கொலையில் திடுக் தகவல் கனவில் வந்த உத்தரவால் கும்பல் வெறியாட்டம்; 8 பேர் கைது

நிதி நிறுவன ஊழியர் கொலையில் திடுக் தகவல் கனவில் வந்த உத்தரவால் கும்பல் வெறியாட்டம்; 8 பேர் கைது

நிதி நிறுவன ஊழியர் கொலையில் திடுக் தகவல் கனவில் வந்த உத்தரவால் கும்பல் வெறியாட்டம்; 8 பேர் கைது

ADDED : ஜூலை 30, 2024 05:27 AM


Google News
கரூர்: கரூர் அருகே, நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்ப-வத்தில், பழிக்கு பழியாக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்-ளதும், ஏற்கனவே கொலையானவர் கனவில் தோன்றி உத்தரவிட்-டதால், அதை நிறைவேற்ற கும்பல் வெறியாட்டம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்த செந்-தில்குமார் மகன் ஜீவா, 19; திருப்பூரில் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 22ல் விடுமுறையில் காந்தி கிரா-மத்துக்கு வந்த ஜீவாவை, ஒரு கும்பல் முன் விரோதம் காரண-மாக, ஆறு துண்டுகளாக வெட்டி, பசுபதிபாளையம் அருகே தொழிற்பேட்டை வளாகத்தில் குழி தோண்டி புதைத்தனர். நேற்று முன்தினம் மதியம், ஜீவாவின் உடல் தோண்டி எடுக்கப்-பட்டது.

கொலை தொடர்பாக, தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சசிக்-குமார், 27. பாண்டீஸ்வரன், 20, மதன் கார்க்கி, 19, சுதாகர், 21, அருண்குமார், 20, மதன், 21, ஹரி, 19, ஹரி பிரசாத், 20, ஆகிய எட்டு பேரை தான்தோன்றிமலை போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்பு-டைய கபில் குமார், 20, சந்துரு, 21, ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சசிக்குமார், மதன் ஆகி-யோரை, போலீசார் நேற்று அதிகாலை, கொலைக்கு பயன்படுத்-தப்பட்ட அரிவாளை கைப்பற்ற, பசுபதிபாளையம் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, தப்பி ஓட முயன்ற சசிக்குமாருக்கு காலிலும், மதனுக்கு கையிலும் அடிபட்-டது. அவர்களுக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னையில், மாவு கட்டு போடப்பட்டது.

கொலை நடந்தது எப்படி?

ஜீவா கொலை குறித்து போலீசார் கூறியதாவது:கடந்த, 2021ல் கிருஷ்ணமூர்த்தி என்பவர், அவரது நண்பர்களான சசிக்குமார், மோகன் ஆகியோரை மேலப்பாளையம் அமராவதி ஆற்றுக்கு அழைத்து சென்று, முன் விரோதம் காரணமாக, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதில், மோகன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சசிக்குமார் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். மோகன் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கிருஷ்ண-மூர்த்தி, தற்போது ஜாமினில் உள்ளார். மோகன் கொலையில், மதுவில் விஷம் கலந்து கொடுத்த ஜீவா அப்போது, 16 வயது சிறுவன் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

கடந்த, 2021ல் கொலை செய்யப்பட்ட மோகன், சசிகுமாரின் கனவில் அடிக்கடி வந்து, 'என் கொலைக்கு காரணமான ஜீவாவை ஏன் விட்டு வைத்துள்ளாய்' என கேட்டதாகவும். அதற்காக ஜீவாவை கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து சசிகுமார் திட்-டமிட்டுள்ளார். தன் உயிருக்கு ஆபத்து என கருதிய ஜீவா, திருப்பூரில் தங்கி வேலை செய்துள்ளார். அங்கிருந்தபடி, 'சசிக்குமார் படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டு, தலையை சிதைத்து விடுவேன்' என, பதிவிட்டுள்ளார்.

இதனால், மேலும் ஆத்திரமடைந்த சசிக்குமார், திட்டம் போட்டு ஜீவாவை கரூர் வரவழைத்தார். தொடர்ந்து தன் கூட்டாளிகள் மூலம் ஜீவாவை, தொழிற்பேட்டை வளாகத்துக்கு பஞ்சாயத்து பேச சசிக்குமார் தரப்பு அழைத்து சென்றுள்ளது. அங்கு ஜீவாவை கொலையாளிகள் அனைவரும் சேர்ந்து அடித்து ரத்த வெள்-ளத்தில் போட்டுள்ளனர். பின்னர், ஆடு வெட்ட கறிக்கடையில் பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு வந்த சசிக்குமார், ஜீவாவை துண்டு துண்டுடாக வெட்டி கொலை செய்து புதைத்-துள்ளார். ஜீவா உடலை வெட்டுவதற்கு முன், கொலையாளிகள் அனைவரும் மது அருந்தியுள்ளனர்.இவ்வாறு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us