/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மின் கட்டண உயர்வை கண்டித்து இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து இ.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2024 04:50 AM
கரூர்: கரூர் மாவட்ட இ.கம்யூ., கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மின் கட்டண உயர்வை, தி.மு.க., அரசு திரும்ப பெற வேண்டும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி, தமிழகத்தில் மாதந்-தோறும் மின் அளவை கணக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உதய் மின் திட்ட த்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ரத்தினம், மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகம், மோகன்குமார், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் குப்புசாமி, கலாராணி, லட்சுமி காந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.