/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
ADDED : ஜூலை 30, 2024 04:48 AM
கரூர்: கரூர் மாவட்டம், சுக்காலியூர் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 51; இவர், நேற்று முன்தினம் மதியம், டி.வி.எஸ்., மொபட்டில், கரூர்-சேலம் சாலை கருப்பம்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், முருகன் மீது மோதியது. அதில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த முருகன், தலையில் அடிபட்டு உயிரிழந்தார். முருகனின் மனைவி அழகு ராணி, 49; கொடுத்த புகாரின்படி, பசுபதி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.