/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் காய்ந்து வரும் பயிர்கள்; விவசாயிகள் மனு புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் காய்ந்து வரும் பயிர்கள்; விவசாயிகள் மனு
புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் காய்ந்து வரும் பயிர்கள்; விவசாயிகள் மனு
புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் காய்ந்து வரும் பயிர்கள்; விவசாயிகள் மனு
புகளூர் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் காய்ந்து வரும் பயிர்கள்; விவசாயிகள் மனு
ADDED : ஜூலை 30, 2024 04:48 AM
கரூர்: 'கடந்த, 150 நாட்களுக்கு மேலாக புகளூர் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், பயிர்கள் கருகி வருகிறது' என, தென்னை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி விவசாயிகள் சங்கம் தலைவர் சுப்பிரமணியன், கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் புகளூர், பாப்-புலர் முதலியார் வாய்க்கால்கள் மூலம் கரும்பு, நெல், வாழை, கோரை, வெற்றிலை உள்ளிட்ட, 3,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்-படுகின்றன. இந்த வாய்க்காலில் ஆண்டுதோறும் மே அல்லது ஏப்ரல் மாதங்களில் ஒரு மாதம் பராமரிப்புப் பணி நடைபெறும் நிலையில், நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் 10ல் வாய்க்காலில் பராமரிப்புப் பணி என்ற பெயரில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. வாய்க்கால் தண்ணீரை நம்பி வெற்றிலை, வாழை, கரும்பு, கோரை உள்ளிட்டவற்றைப் பயிர்கள் காய்ந்து வருகின்றன. இப்படி நிறுத்தப்பட்டு, 150 நாட்கள் ஆகிய நிலையில், பாலம் கட்டுமான பணி, துார் வாருதல் போன்றவைகளை செய்திருக்க வேண்டும். அங்கு பணிகள் முடிக்காமல், இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. உடனடியாக கலெக்டர் நேரடியாக பார்வை-யிட்டு தண்ணீர் திறந்து, கருகும் பயிர்களை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.