ADDED : ஜூன் 06, 2025 01:54 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொங்கணசித்தர் குகையில், வாரம்தோறும் வியாழக்கிழமை, குருவார சிறப்பு பூஜை நடந்து வருகிறது.
அதன்படி நேற்று மதியம், 12:00 மணிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. செக்காரப்பட்டி, குப்பிச்சிபாளையம், மரப்பரை, கருங்கல்பட்டி, சோமணம்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம் என சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.