/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள் குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்
குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்
குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்
குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்
ADDED : ஜூன் 06, 2025 01:26 AM
கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 18-வது வார்டில் உள்ள ராஜா நகரில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, 7, 8 வது குறுக்கு சந்துகளில் சாலைகள் அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலாவதால், சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கழிவுநீர் வாய்க்கால் வசதியும் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம் போல தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுநீரில், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது.சாலையை சீரமைக்க கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், சீரமைக்கப்படவில்லை. விரைந்து சாலையை சீரமைத்து, கழிவுநீர் வசதி இல்லாத இடங்களில், வாய்க்கால் அமைத்து தரவேண்டும்.