ADDED : மே 11, 2025 01:05 AM
கரூர், வெள்ளியணை அருகே, மூதாட்டியிடம் தங்க செயினை பறித்து சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை கத்தாளப் பட்டி புதுார் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 65; இவர், நேற்று வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு பேர், டூவீலரில் சென்று லட்சுமியிடம் விலாசம் கேட்டுள்ளனர். பிறகு, லட்சுமி அணிந்திருந்த, நான்கு பவுன் தங்கசெயினை பறித்து கொண்டு, இருவரும் டூவீலரில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து, லட்சுமி கொடுத்த புகாரின்படி, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.